search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பெண்"

    விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக தம்பதி மீது பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்தவர் கலைச்செல்வி முருகையன் (24). இவர் சிங்கப்பூரில் தனது கணவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை விட்டு கணவர் பிரிந்து விட்டார்.

    எனவே சிங்கப்பூரில் வாழவழி தெரியாத அவர் அங்கு தனக்கு பழக்கமான கணவன், மனைவியிடம் உதவி கேட்டார். அப்போது அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக கலைச்செல்வி மத்திய போலீஸ் டிவிசன் இன்ஸ்பெக்டர் முகமது ரபி, முகமது ஈசாக்கிடம் புகார் கொடுத்தார்.

    எனவே கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதி மீது கலைச்செல்வி கொடுத்தது பொய் புகார் என தெரிய வந்தது.

    அதைதொடர்ந்து கலைச்செல்வி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 வாரங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    பொய் புகார் வழக்கில் கலைச்செல்விக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், சிங்கப்பூர் பணம் 5 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும், எனவே தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும், கலைச்செல்வி கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.
    இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
    இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொழும்பு:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

    இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    சர்வதேச நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். #GitaGopintah #ChiefEconomist
    வாஷிங்டன்:

    189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

    இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

    கடந்த 1-ந்தேதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

    தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #GitaGopintah #ChiefEconomist 
    அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நியூயார்க்கை சேர்ந்த நபரை கைது செய்தனர். #NewYork #IndianOrgin #SubwayAttack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வசித்து வருபவர் அவ்னீத் கவுர் (வயது 20). இந்தியப் பெண்ணான இவர், தனது தோழியுடன் சமீபத்தில் நியூயார்க் மேன்ஹாட்டனில் சுரங்க ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது அவ்னீத் கவுருடன், அந்த ரெயிலில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த அல்லாஷீத் அல்லா (54) என்பவர் வாய் தகராறில் ஈடுபட்டார்.

    அவ்னீத் கவுரும், அவரது தோழியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கிண்டல் செய்தார்.

    இந்த நிலையில் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவ்னீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அல்லாஷீத் அல்லா அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர் திடீரென அவ்னீத் கவுரின் பின் தலையில் அடித்தார். அவரது நெஞ்சிலும் குத்தினார்.

    இதில் அவ்னீத் கவுர் கீழே சுருண்டு விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள குயின்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்லாஷீத் அல்லாவை கைது செய்தனர். அவர் அவ்னீத் கவுர் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வக்கீல் ரிச்சர்டு பிரவுன் கூறினார்.

    இந்த சம்பவம், நியூயார்க் இந்திய வம்சாவளி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.  #NewYork #IndianOrgin #SubwayAttack 
    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump #USCourt #NeomiRao
    வாஷிங்டன்:

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    அமெரிக்காவில் பல பெண்களின் பாலியல் புகார்களுக்கு ஆளானவர் நீதிபதி பிரெட் கவனாக் (வயது 53). அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அவர் கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.



    அதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த வாஷிங்டன் மாகாணம், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவி காலியானது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவது இந்த கோர்ட்டு ஆகும்.

    இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (45) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், “செல்வாக்கு மிக்க அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.

    நியோமி ராவ் தேர்வு பற்றிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.

    நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்தார். டெட்ராய்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

    சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி டிரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.

    இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  #DonaldTrump #USCourt #NeomiRao 
    அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய பெண் நியோமி ஜகாங்கிர் ராவை ஜனாதிபதி டிரம்ப் நேர்காணல் நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DonaldTrump #Interview #IndianAmericanWoman #JudgePost
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடுமையான பாலியல் புகார்களுக்கு ஆளான பிரெட் கவனாக், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாக அவர் வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தார்.



    அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகி விட்டதால், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு பரிசீலிக்கப்படுகிறவர்களில் ஒருவர், இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (வயது 45) ஆவார். இவரிடம் சமீபத்தில் ஜனாதிபதி டிரம்ப் நேர்காணல் நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர் தற்போது அங்கு தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக உள்ளார். இந்தப் பதவியில் இவரது நியமனத்துக்கு செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் ஆதரவாக 54 ஓட்டுகளும், எதிராக 41 ஓட்டுகளும் விழுந்தது நினைவுகூரத்தக்கது. இவரை அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதில் டிரம்ப் ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இவர் பார்சி இன இந்திய பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். அமெரிக்காவில் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  
    ஸ்னூக்கர் விளையாட்டின் 16 வயதினருக்கான பிரிவில் இந்திய சிறுமி கீர்த்தனா சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுள்ளார். #IndianGirlWonSnookerTitle #Keerthana
    மும்பை:

    சர்வதேச பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய சிறுமி கீர்த்தனா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்து வெற்றி பெற்றார்.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய போட்டியாளர் அனுபமா ராமச்சந்திரன் என்பவருடன் முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினார்.



    தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவருடன் போட்டியிட்டு 3-1 என்ற செட்டில் அவரை தோற்கடித்து பட்டம் வென்றார். #IndianGirlWonSnookerTitle #Keerthana
    அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.

    இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.



    இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்று உள்ளார். பின்னர் நாட்டின் அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    ×